சரக்கு இல்லைன்னா ஒதுக்கிடுவாங்க - காஜல் தத்துவத்தின் பின்னணி

Webdunia
சனி, 18 அக்டோபர் 2014 (11:18 IST)
திடீரென்று ரசிகர்களை புகழ்ந்து பேட்டி தந்திருக்கிறார் காஜல் அகர்வால். எப்படி?
 
ரசிகர்களை வெறும் அப்பாவிகள் என்று நிகைக்கக் கூடாது. அவர்கள் புத்திசாலிகள். எவ்வளவுதான் நீங்கள் விளம்பரப்படுத்தினாலும் அவர்கள் படம் பார்க்க மாட்டார்கள். படம் நன்றாக இருந்தால் மட்டுமே பார்ப்பார்கள். படத்தில் சரக்கு இல்லை என்றால் எவ்வளவுதான் நாம் விளம்பரப்படுத்தினாலும் நிச்சயம் படத்தை பார்க்க வர மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
ரசிகர்கள் ஓட வைக்கும் நல்ல படங்கள் எவை என்பது இந்தியாவுக்கே தெரியும். அதனால் ரசிகர்களின் ரசனை ஒரு ஓரமாக இருக்கட்டும். யாரையும் கண்டு கொள்ளாத காஜலுக்கு திடீரென்று ரசிகர்கள் அதிபுத்திசாலிகளாகத் தோன்ற என்ன காரணம்...?
 
படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து கல்தா கொடுத்து வருகிறார் காஜல். இனியும் இது தொடர்ந்தால் ரெட் கார்ட் கிடைக்கும் என்ற நிலை. அதை மனதில் வைத்துதான், நான் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் இல்லாவிட்டாலும் சரக்கு இருந்தாதான் ஓடும். அதனால் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துக்க சொல்லி சும்மா சும்மா தொந்தரவு பண்ணாதீங்க என்று சூசகமாக சொல்கிறாராம். 
 
சோழியன் குடுமி சும்மா ஆடாது.