விஜய்சேதுபதியின் க/பெ ரணசிங்கம்: சென்சார் தகவல்

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (08:18 IST)
நடிகர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தை ஓடிடியில் ஒரு முறை பார்ப்பதற்காக 199 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்பதும் இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
இந்த நிலையில் க/பெ ரணசிங்கம் படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யூ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படம் ஓடிடியில் மட்டும் வெளியாக இருந்தால் சென்சார் தேவையில்லை. ஆனால் பெங்களூரு, கொச்சி உள்பட ஒருசில நகரங்களில் உள்ள டிரைவ்-இன் தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆக உள்ளது என்பதால் சென்சார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
விருமாண்டி இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் ஏகாம்பரம் ஒளிப்பதிவில் சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்