ஐஷ்வர்யா ராஜேஷூக்கு அக்காவா ஜோதிகா??

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (20:43 IST)
மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூக்கு அக்காவாக நடிகை ஜோதிகா நடிக்கவுள்தாக தகவல் வெளியகின்றன.


 
 
திருமணத்திற்கு பின்னர் 7 வருடங்கள் கழித்து ஜோதிகா மீண்டும் தமிழ் சினிமாவில் தலைக்காட்ட துவங்கியுள்ளார். அவருக்கு நல்ல வரவேற்பையே தமிழ் சினிமாவும் கொடுத்துள்ளது. 
 
இந்நிலையில் நடிகை ஜோதிகா மணிரத்னம் இயக்கவிருக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இவர் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான டும் டும் டும் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 
 
படத்தில் நடிகை ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷூக்கு அக்காவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், படத்தில் அரவிந்த்சாமி, பஹத் பாசில், விஜய்சேதுபதி, சிம்பு ஆகியோர் நடிக்கவுள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்