தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆரின் 30 ஆவது படமான தேவராகடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.
இரண்டு பாகங்களாக உருவான படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் முதல் காட்சியிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. பல காட்சிகள் இணையத்தில் ட்ரோல் ஆகின. ஆனாலும் படம் திரையரங்குகள் மூலமாக மொத்தம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ஐந்து மொழிகளில் நவம்பர் 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.