விஜய்க்காக சம்பளம் வாங்காமல் நடிக்க தயார்: ஜெயம் ரவி

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (04:38 IST)
இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயீஷா நடிப்பில் உருவாகியுள்ள 'வனமகன்'' திரைப்படம் வரும் 23ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.



 


இந்த நிலையில் சென்னையில் நேற்று நடந்த புரமோஷன் விழாவில் பேசிய ஜெயம் ரவி, 'வனமகன் திரைப்படம் அதிகமாக செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் கண்டிப்பாக வசூல் வேட்டை நடத்தும். ஒருவெளை இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் போனால் இயக்குனர் விஜய்க்கு மற்றொரு படத்தை சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுக்க தயாராக இருக்கின்றேன்' என்று கூறினார்.

இதனால் பத்திரிகையாளர்களும் சபையில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் பின்னர் திடீரென அடுத்த கணமே பல்டி அடித்து, சம்பளம் வாங்காமல் நடிப்பது சாத்தியமில்லை. இருபினும் இருவரும் சேர்ந்து அடுத்த படத்தை தயாரிப்போம் என்று ஒருவாறு சமாளித்து தனது பேச்சை முடித்தார்.
அடுத்த கட்டுரையில்