ஜெயம் ரவியின் 28வது படம் அறிவிப்பு: நாயகி யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (18:29 IST)
பிரபல நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது
 
ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தை கல்யாண் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம்ரவி நடித்த பூலோகம் உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது/ பிரியா பவானி சங்கர் இந்தியன்2, யானை உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது என்பதும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்