ஜெயலலிதா மறைவுக்கு அஜித் இரங்கல் அறிக்கை

Webdunia
புதன், 7 டிசம்பர் 2016 (10:40 IST)
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல் தெரிவித்துள்ளார். பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருக்கும் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 
மாண்புமிகு புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ் நாட்டு மக்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பல்வேறு இன்னல்களைக் கடந்து சாதனைப் புரிந்து உயர்ந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வர வேண்டும் என நாம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்துவிட்டார் என்னும் செய்தி என்னைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
 
அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற என் சக தமிழ் மக்களுக்கும் இந்தப் பிரிவைத் தாங்கும் வல்லமையை தர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
 
ஆழ்ந்த வருத்தங்களுடன்,
 
அஜித் குமார்
அடுத்த கட்டுரையில்