உதயநிதியின் கண்னை நம்பாதே படத்தில் ஜெயலலிதா பற்றிய காட்சியா?.. இயக்குனர் விளக்கம்!

வெள்ளி, 17 மார்ச் 2023 (15:23 IST)
சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளரும், நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இப்போது சினிமாவில் நடிப்பதை முழுமையாக தவிர்த்துள்ளார். அவர் ஏற்கனவே நடித்த கண்ணை நம்பாதே மற்றும் மாமன்னன் ஆகிய படங்கள் மட்டும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. இந்நிலையில் அவர் நடித்து நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் இருந்த அவரின் கண்ணை நம்பாதே படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷம் கிரைம் திரில்லர் வகைமையில் உருவாகும் இந்த படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் இயக்குனர் மு மாறன் இயக்கியுள்ளார்.

இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று இந்த படத்தை பத்திரிக்கையாளர்களுக்கு படக்குழுவினர் திரையிட்டனர். அப்போது படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது சம்மந்தமாக வரும் காட்சி பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இயக்குனர் மு மாறன் “அந்த காட்சி பிரச்சனைக்குரியதாக இருந்திஉர்ந்தால் சென்சார் போர்டில் அனுமதித்திருக்க மாட்டார்கள்.” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்