தியேட்டர் + ஓடிடி.. இரண்டையும் குறிவைக்கும் ஜகமே தந்திரம்! – மாஸ்டர் ரூட் ப்ளானா?

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (10:18 IST)
மாஸ்டரை தொடர்ந்து தனுஷ் நடித்து வெளியாகவுள்ள ஜகமே தந்திரம் படமும் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி விரைவில் வெளியாகவுள்ள படம் ஜகமே தந்திரம். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் முழுவதுமாக தயாராகிவிட்ட நிலையில் முன்னதாக திரையரங்குகள் திறக்கப்பட்டபோதோ அல்லது பொங்கலுக்கோ ஜகமே தந்திரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது ஜகமே தந்திரம் ஓடிடி வாயிலாக வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான மாஸ்டர் படத்தை போல முதல் இரு வாரங்கள் திரையரங்குகளில் வெளியிட்ட பின்னர் ஓடிடியில் வெளியிட போவதாக பேசிக் கொள்ளப்படுகிறது. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் பெரிய நடிகர்களின் படங்கள் குறைந்தது ஒரு மாத காலமாவது திரையரங்கில் ஓடிய பின்னர் ஓடிடியில் ரிலீஸ் செய்யலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்