இன்று இரவு ரிலீஸாகிறது சிவகார்த்திகேயன் படத்தின் பர்ஸ்ட் லுக்

வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (11:43 IST)
சிவகார்த்திகேயன் நடித்துவரும் 12வது படத்தின் பர்ஸ்ட் லுக், இன்று இரவு 12 மணிக்கு ரிலீஸாக இருக்கிறது.
‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் 12வது படம் இது. பொன்ராம் இயக்கத்தில்  சிவகார்த்திகேயன் நடிக்கும் மூன்றாவது படம் இது.
 
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும், சிம்ரன், சூரி, நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
 
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரவு 12 மணிக்கு ரிலீஸாக இருக்கிறது. தென்காசி மற்றும் அதனைச்  சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்