தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் மே ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியான போது கேரளாவில் உள்ள அப்பாவி பெண்களை முஸ்லிமாக மாற்றி ஆப்கானிஸ்தான் அழைத்துச் சென்று ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் வலுக்கட்டாயமாக சேர்ப்பதாக இந்த படத்தின் கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் கேரளாவை அடுத்து தமிழகத்திலும் இந்த படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
இந்த படம் வெளியானால் கேரளாவை போல தமிழ்நாட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பலாம் என்பதால் உளவுத்துறை இந்த எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.