இந்நிலையில் படம் ரிலீஸானதில் இருந்து படத்துக்குக் கலவையான விமர்சனங்களேக் கிடைத்து வருகின்றன. முதல் பாகத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த வசனம், திரைக்கதை மேக்கப் மற்றும் நடிப்பு என எதுவும் இரண்டாம் பாகத்தில் ரசிகர்களைக் கவரவில்லை. ஆனாலும் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. ஆனால் அடுத்த நாளே வசூல் படுத்திவிட்டது என்று தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில் சமூகவலைதளங்களில் படத்தின் மீதான ட்ரோல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் படத்தின் நீளம் ஒரு பெரிய குறையாக சொல்லப்படும் நிலையில் படத்தில் இருந்து 15 நிமிடக் காட்சிகளை நீக்கியுள்ளனராம் படக்குழுவினர். இதற்காக மீண்டும் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். சென்சார் செய்யப்பட்டதும் நாளை முதல் அந்த வெர்ஷனே திரையிடப்படும் என சொல்லப்படுகிறது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என மூன்று வெர்ஷன்களிலுமே இந்த நிமிடக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.