முதல் நாளில் இந்தியன் 2 தமிழகத்தில் வசூல் எவ்வளவு?... வெளியான தகவல்!

vinoth

சனி, 13 ஜூலை 2024 (15:04 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படம் உலகெங்கும் 5000க்கும் மேற்பட்ட திரைகளில் நேற்று ரிலீஸானது.

இந்நிலையில் படம் ரிலீஸானதில் இருந்து படத்துக்குக் கலவையான விமர்சனங்களேக் கிடைத்து வருகின்றன.  முதல் பாகத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த வசனம், திரைக்கதை மேக்கப் மற்றும் நடிப்பு என எதுவும் இரண்டாம் பாகத்தில் ரசிகர்களைக் கவரவில்லை.

ஆனாலும் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு காரணமாக படத்தின் முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் 28கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் நெகட்டிவ் விமர்சனம் காரணமாக இந்த வசூல் தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்