இந்நிலையில் படம் ரிலீஸானதில் இருந்து படத்துக்குக் கலவையான விமர்சனங்களேக் கிடைத்து வருகின்றன. முதல் பாகத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த வசனம், திரைக்கதை மேக்கப் மற்றும் நடிப்பு என எதுவும் இரண்டாம் பாகத்தில் ரசிகர்களைக் கவரவில்லை.
படத்தில் ரசிகர்களுக்கு ஆறுதலாக மறைந்த நடிகர்களான விவேக், நெடுமுடி வேணு மற்றும் மனோபாலா ஆகியோரின் காட்சிகள் அமைந்துள்ளன. இந்நிலையில் விவேக் இறந்த பின்னர் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளில் தான்தான் நடித்தேன் என நடிகர் கோவை பாபு, படம் பார்த்துவிட்டு தெரிவித்துள்ளார். படத்தில் நடிக்க ஷங்கர் தனக்கு உள்ளீடுகள் கொடுத்து உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.