விஜய் 61 படத்தில் நடித்தபோது விஜய்யிடம் நித்யாமேனனனுக்கு பிடித்தது இதுதானாம்!

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (16:35 IST)
விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

 
 
நடிகை நித்யாமேனன் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்திற்கு பிறகு முடிஞ்சா இவனை புடி, இருமுகன் போன்ற படங்களிலும் நடித்தார். தற்போது விஜய்யின் 61-வது படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நித்யாமேனன்.
 
இந்நிலையில் விஜய் 61 படத்தில் விஜய்யுடன் நடித்தது பற்றி நிதயாமேனன் கூறிகையில், விஜய்யிடம் எனக்கு பிடித்தது முதலில் அவரது அமைதிதான். படப்பிடிப்பு தளத்தில் கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே பேசுவார். அந்த கதாபாத்திரத்தின் பீலுடன் இருப்பார். நம்மையும் படத்தின் கதாபாத்திரமாக மட்டுமே நினைப்பார். மேலும் விஜய் படத்தில் நடித்தது எனக்கு ஒரு புது அனுபவமாகவே இருந்தது என்றார் நித்யாமேனன்.
அடுத்த கட்டுரையில்