ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு அடிபட்டதா?

Webdunia
வியாழன், 9 மார்ச் 2017 (15:09 IST)
விஜய் ரத்தக்கறையுடன் அமர்ந்திருக்கும் ஸ்டில் வெளியானதால், அவருக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிபட்டிருக்குமோ என  ரசிகர்கள் பதறியுள்ளனர்.

 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘விஜய் 61’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பனையூரில் முடிந்த நிலையில்,  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில், வேட்டி - சட்டையில் ரத்தக்கறையுடன் விஜய் அமர்ந்திருப்பது போன்ற ஒரு படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அதைப் பார்த்த ரசிகர்கள், ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு அடிபட்டிருக்குமோ என பதறினர். ஆனால், அது படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில் என்பது தெரிந்ததும் சந்தோஷம் அடைந்துள்ளனர்.
 
அடுத்த கட்டுரையில்