மகாபாரத கேரக்டரில் நடிக்கும் அஞ்சலி

Webdunia
சனி, 11 மார்ச் 2017 (11:30 IST)
அசோக் இயக்கும் தெலுங்குப் படத்தில், அர்ஜுனன் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஞ்சலி.
 
 
அசோக் இயக்கும் தெலுங்குப் படம் ‘சித்ரங்கதா’. அஞ்சலி நடிக்கும் இந்தப் படம், பெண்ணை முன்னிலைப்படுத்தி  எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தில், மகாபாரதக் கதையில் வரும் அர்ஜுனனின் மனைவிகளுள் ஒருவரான சித்ரங்கதா கேரக்டரில்  நடிக்கிறார் அஞ்சலி. திரில்லர் படமாக இது உருவாகிறது. 
 
‘போரில் கலந்துகொண்ட சித்ரங்கதா, பல்வேறு தனித்திறமைகள் கொண்டவர். அவருடைய கேரக்டரில் நடிப்பது பெருமையான  விஷயம்’ என தெரிவித்துள்ளார் 2014ஆம் ஆண்டு அஞ்சலி நடித்த ‘கீதாஞ்சலி’ தெலுங்குப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்.  அதைப்போலவே இந்தப் படமும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கிறார்கள் அஞ்சலி ரசிகர்கள்.
அடுத்த கட்டுரையில்