ஆதிக் ரவிச்சந்திரனின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் அறுபது வயது தாத்தா கெட்டப்பில் சிம்பு நடிக்கிறார். அஸ்வின் என்ற அந்த கதாபாத்திரம் வழக்கமான தாத்தா கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்ட விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
தாத்தா கதாபாத்திரம் என்றால் முடி கொட்டி, பலமிழந்து வயோதிகரைப் போலத்தான் காட்டுவார்கள். இதில் அப்படியில்லாமல் பலமிக்கவராகவும், முடி கொட்டாத இளைஞனை போலவும் காட்டியிருக்கிறார்களாம். இந்தப்படத்தில் சிம்பு மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பது முக்கியமானது.
இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் என்று முன்னரே அறிவித்திருந்த நிலையில் ஸ்ரேயா ஒப்பந்தமாகி அவருடைய காட்சிகள் எடுத்துமுடிக்கப்பட்டுவிட்டன. இப்படத்தில் அஸ்வின் தாத்தா எனும் கதாப்பாத்திரத்துக்கும், தமன்னாவுக்கும் என்ன சம்பந்தம் என்று விரைவில் தெரியவரும்.