நீங்க இடம் தரலைனா ம்யூசிக் போட முடியாதா? – உருவானது இளைய“ராஜா ஸ்டுடியோ”

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (09:19 IST)
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ அனுமதி மறுத்த நிலையில் புதிய ம்யூசிக் ஸ்டுடியோவை உருவாக்கியுள்ளார் இசைஞானி.

தமிழ் திரையிசையின் மங்காத இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இதுவரை 1000 படத்திற்கும் மேல் இசையமைத்துள்ள இவர் பல ஆண்டுகாலமாக தனது இசையமைப்பு பணிகளை பிரசாத் ஸ்டுடியோவில்தான் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு பிரசாத் ஸ்டுடியோவில் அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் பாரதிராஜா உள்ளிட்ட பல திரைத்துறையினர் தலையிட்டு தீர்வு காண முயன்றனர். இந்த பிரச்சினையில் தீர்வு காண முடியாத சூழலில் இளையராஜா இசையமைக்க தனி இடம் அமைத்து தரப்படும் என பாரதிராஜா தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள ஏவிஎம் ப்ரிவியூ தியேட்டரை வாங்கி அதை தனது ம்யூசிக் ஸ்டுடியோவாக மாற்றியுள்ளார் இளையராஜா.

”ராஜா ஸ்டுடியோ” என பெயரிடப்பட்டுள்ள அந்த ரெக்கார்டிங் ஸ்டிடியோவின் பணிகள் செப்டம்பர் இறுதிக்குள் முடிவடைய உள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. செண்டிமெண்டலாக பல ஹிட் அடித்த பாடல்களை பிரசாத் ஸ்டுடியோவில்தான் இளையராஜா இசையமைத்தார். அதுபோல புதிய ஸ்டுடியோவும் அவருக்கு செண்டிமெண்டலாக செட் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்