இசை மழையில் நனைய தயாரா?; துபாயில் இளையராஜா!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (15:04 IST)
துபாயில் நடைபெறும் 2020 எக்ஸ்போவில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த பல தசாப்தங்களாக தமிழ், இந்தி, தெலுங்கு என பல இந்திய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளவர் இசைஞானி இளையராஜா. திரைப்பட இசை மட்டுமல்லாது ஆல்பமாக தனியாக சில இசை ஆல்பங்களையும் இளையராஜா வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் துபாயில் நடந்து வரும் பிரபலமான துபாய் 2020 எக்ஸ்போவில் தான் இசை நிகழ்ச்சி நடத்தவிருப்பதாக இளையராஜா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்