ராணா டகுபதி தெலுங்குப் படம் லீடரின் மூலம் நடிகரானவர். அதற்கு அடுத்து அவர் நடித்தது ஒரு இந்திப் படம், டம் மரோ டம்.
இரண்டாவது படத்திலேயே பாலிவுட்டில் கால் பதித்த அவர் சில இந்திப் படங்களில் நடித்தார். ஆனால், சமீபமாக இந்தியில் அவரை பார்க்க முடியவில்லை.
பாகுபலி போன்ற ஒரு படத்தில் நடித்தால் வேறு படங்களில் அதிகம் நடிக்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ள ராணா, பாகுபலி இந்தி வெர்ஷன் 100 கோடியை தாண்டி வசூலித்தது என்று கூறியுள்ளார். மேலும், பாகுபலி இரண்டாம் பாகத்திற்குப் பிறகு இந்திப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். கேகே மேனன், அதுல் குல்கர்னி,
தாப்ஸி ஆகியோர் இந்தப் படத்தில் ராணாவுடன் நடிக்கின்றனர்.
பாகுபலி 2 முடிந்த பிறகு தொடர்ச்சியாக இந்திப் படங்கள் நடிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்