சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறேன்… விஜய்சேதுபதி பட நடிகர் வேதனை

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (19:08 IST)
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரல் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.  கடந்த மார்ச்சில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். அரசும் ,தன்னார்வலர்களும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினர்.

இந்நிலையில், சினிமாப் படப்பிடிப்புகள் தொடங்கவும் திரையரங்குகள் திறக்க அனுமதிக்க வேண்டுமென இயக்குநர் பாரதி ராஜா அமைச்சர் கடம்பூர் ராஜுகு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், சினிமா துணைநடிகர்கள் வாழ்வாதாரம் இன்றி முடங்கியுள்ளனர். நடிகர் பாக்யராஜியின் தூறல் நின்னுப் போச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சூரியகாந்த்,  சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சிரமப்படுவதக தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் காத்தியின் கைதி, விஜய் சேதிபதியின் சங்கத் தமிழன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்