நான் தயாரிப்பாளர் கிடையாதுங்க...

Webdunia
சனி, 7 மே 2016 (15:11 IST)
கன்னடத்தில் வெளியான யூ டர்ன் திரைப்படத்தின் உரிமையை வாங்கி அப்படத்தை தமிழ், தெலுங்கில் தயாரிப்பதுடன், நடிக்கவும் செய்கிறார் சமந்தா என ஒரு தகவல் உலவுகிறது.


 


யூ டர்ன் திரைப்படத்தை இயக்கியவர் இதற்கு முன் இயக்கிய படம், லூசியா. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக், எனக்குள் ஒருவனில் நடித்தவர் சமந்தாவின் முன்னாள் காதலர் சித்தார்த்.இப்போது இந்த செய்திக்கு ஒரு கூடுதல் கவர்ச்சி கிடைத்திருக்குமே...?
 
யூ டர்ன் திரைப்படத்தை பெங்களூரு சென்று பார்த்தார் சமந்தா. அதன் ரீமேக்கில் நடிக்கவும் செய்கிறார். ஆனால், சிலர் சொல்வது போல் அவர் அந்த ரீமேக்கை தயாரிக்கவில்லை. படம் பிடித்ததால் நடிக்க மட்டுமே செய்கிறேன், தயாரிக்கவில்லை என்று சமந்தா கூறியுள்ளார்.
 
எனக்குள் ஒருவனைப் போல் படம் தோல்வி அடையக் கூடாது என்பதில் சமந்தா கவனமாக இருக்கிறார். 
 
முன்னாள் காதலன் கோட்டைவிட்ட இடத்தில் சமந்தா கொடி நாட்டப் பார்க்கிறார். 
 
சமந்தாவுக்கு நம் வாழ்த்துகள்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்