அனிஷாவுடன் காதல் மலர்ந்தது எப்படி: விஷால் பேட்டி

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2019 (12:07 IST)
நடிகர் விஷால், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சவீதா தம்பதியின் மகள் அனிஷாவை திருமணம் செய்து கொள்ள  உள்ளார்.
 
இவர்  அர்ஜுன் ரெட்டி படத்தில் சில காட்சிகளில் நடித்து உள்ளார். அனிஷாவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது கூறுகையில், அயோக்யா படத்தின் படப்பிடிப்புக்காக விசாகப்பட்டினத்தில் இருந்த போது  அனிஷா மற்றும் சிலர் என்னை குழுவாக சந்தித்தனர். அவர்கள் ‘மைக்கேல்’ என்ற ஆங்கில படத்தை தயாரிக்கப் போவதாகவும், அதில் அனிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் அபூர்வா இயக்குகிறார் என்றும் தெரிவித்தனர். 
 
அந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் எடுக்கும்  படத்தின் கதையும் விவசாயத்தை மையப்படுத்தி இருந்தது. கதை எனக்கும் பிடித்து இருந்தது. அதனால் அந்த படத்தை நானே  வெளியிடுகிறேன் என்று கூறினேன். 
 
அந்த சந்திப்பில்தான் அனிஷா எனக்கு அறிமுகமானார். பார்த்ததும் பிடித்துப்போனது. அவரை கடவுள் என்னிடம் அனுப்பியதாக உணர்ந்தேன்.  பிறகு நட்பாக பழகினோம். ஒரு கட்டத்தில் நான்தான் முதலில் காதலை அவரிடம் சொன்னேன். அனிஷா உடனே பதில் சொல்லவில்லை. சில நாட்கள் கழித்து காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். சந்தோ‌ஷப்பட்டேன். 
 
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என்று அவருக்கு தடை போட மாட்டேன். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு எங்கள்  திருமணம் நடக்கும் இவ்வாறு விஷால் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்