கையாலாகாத அரசு எத்தனை உயிர்களைக் காவு வாங்குமோ? கமல்ஹாசன் டுவீட்

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (19:46 IST)

நடிகர் கமல்ஹாசன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இன்றுமாலை தனது டிவிட்டர் பக்கத்தில், அடுத்தடுத்து டுவீட்களைப் பதிவிட்டு வருகிறார்.

அதில், பண்டிகை நாட்களை ஒட்டிய விடுமுறை தினங்களில்தான் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள். கூட்டம் கூடும் தினங்களில் ஊட்டி மலை ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து இயக்கினால், டிக்கெட் விலை பன்மடங்காகத்தான் இருக்கும். எந்தச் சிறிய கொண்டாட்டமும், குதூகலமும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் எனும் நிலைமையை ரயில்வே உருவாக்கக் கூடாது.

இந்தியப் பெண்களுக்கு கழிவறை வசதி 73 ஆண்டுகளாகத் தீராத பிரச்சனை. அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம். பொது இடங்களில் பெண்களுக்கு கழிவறை வசதி செய்திருக்கிறோமா? நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் பதில் தேடியாக வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.அதில்,

மழைக்காலத்திற்கென திட்டமிட்டிருந்தால், ஆபத்தான கால்வாயென எச்சரிக்கை வைத்திருந்தால், சாலையில் விளக்கு எரிந்திருந்தால், மருத்துவர் கரோலின் பிரிசில்லாவையும் மகள் எல்வினையும் இழந்திருக்க மாட்டோம். கையாலாகாத அரசு எத்தனை உயிர்களைக் காவு வாங்குமோ? எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்