கொரோனா சிகிச்சை: குணமடைந்ததும் சிறைக்கு திரும்பிய சினிமா தயாரிப்பாளர் !

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (09:22 IST)
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டீன் கொரோனா சிகிச்சை முடிந்த நிலையில் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார்.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியவர். இந்நிலையில் தன்னிடம் வாய்ப்புக் கேட்பவர்கள் மற்றும் தன் படத்தில் நடிப்பவர்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக கடந்த 2016 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவர் மீது பிரபல நடிகையான ஏஞ்சலீனா ஜோலி உள்ளிட்டவர்கள் புகார் கூறினார்.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து நியுயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இப்போது அவர் குணமடைந்ததை அடுத்து மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்