காதலனை அடித்துத் துன்புறுத்திய நடிகை – 75 லட்சம் கட்டி ஜாமீன்!

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (08:25 IST)
வால்ட் டிஸ்னி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நடிகை ரோனி ஹாக். தனது காதலனை அடித்து துன்புறுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற சினிமா மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான வால்ட் டிஸ்னியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பின்னர் நடிகையாக மாறியவர் ரோனி ஹாக். 20 வயதே ஆன இவரின் ரேச்சல் டையஸ் என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.

இந்நிலையில் கடந்த மாதம் ரோனி ஹாக்கின் காதலர் போலிஸாருக்கு போன் செய்து ரோனி தன்னை உடல்ரீதியாக தாக்கி கொடுமைப் படுத்துவதாக புகாரளித்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டார். அதில் அந்த நபர் சொன்னது உண்மை என தெரிய வந்துள்ளது. மேலும் காதலனின் உடலில் இருந்த காயங்களையும் போலீஸாரால் ஆதாரங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இதையடுத்து ஒரு மில்லியன் டாலர் (75 லட்சம் பேர்) கட்டி ஜாமீன் பெற்றுள்ளார் ரோனி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்