உலக நாடுகளைத் தாண்டி இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168க்கும் மேல் தாண்டிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் உலக மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும் என ஒருவருக்கொருவர் அறிவுரைகள் வழங்கி வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் "கொரோனா வைரஸ் ஒரு அச்சுறுத்தல் தான். ஆனால், நாம் கவனமாக செயல்பட்டால் அதை நிச்சயமாக கட்டுப்படுத்த முடியும். நிலவேம்பு கசாயம் 60ml ஒரு நாளைக்கு இரண்டு முறை 14 நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். என கூறியுள்ளார். இதோ அந்த முழு வீடியோ...
Yes ! Corona virus is a threat. But it can surely be controlled if we act with care. ‘Behave as if you have the virus’ - that will do the trick