பகாசூரன் பட முதல் சிங்கில் பாடலை பிரபல நடிகர் ரிச்சர்ட் ரிஷி வெளியிடுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்சினிமாவில் பிரபல இயக்குனர் மோகன் ஜி சத்ரியன். இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரவுபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இதில், திரவுபதி படம் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி – சவுந்தர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி வசூல் குவித்தது. இதனால், இவரது அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில், இன்று அஜித்61 பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என தகவல் வெளியானது. இதை புரமோசன் செய்யும் விதத்தில், நடிகர் நட்டி மற்றும் கூல் சுரேஷ் இதுகுறித்த வீடியோவை பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், மோகன் ஜி இயக்கத்தில் உருவாகிவரும் பகாசூரன் பட#SivaSivayamமுதல் சிங்கிலை அவரது முதல் பட ஹீரோ ரிச்சர்ட் ரிஷி இன்று மாலை 5:30க்கு வெளியிடவுள்ளார். இதனால் இன்னும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.