சுந்தர் சி படத்தில் நடிகர்களாகும் பாடகர்கள்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (17:49 IST)
இயக்குனர் சுந்தர் சி இயக்கி வரும் அரண்மனை 3' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
சுந்தர் சி, ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷிகன்னா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு பாடகர்கள் நடித்துள்ளதாக குஷ்பு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகிய இரண்டு பாடகர்கள் இந்த படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளதாகவும் அந்த பாடலில் அவர்களே நடித்துள்ளதாகவும் அந்த பாடலில் நடிக்க அவர்கள் ஒப்புக் கொண்டதற்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
முதன்முதலாக பெரிய திரையில் பாடகர்களான ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன் தோன்ற உள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்