சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் , நண்பர்கள் , ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீர ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழகிய தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். "ஒருமுறை கூட உங்கள் சிகரம் குறைந்ததேயில்லை.நீங்கள் தூக்கிப்போடுப் பிடிக்கும் சிகரெட் விழுந்ததேயில்லை.ஆறில் இருந்து அறுபது வரை,உங்கள் வசீகரத்தில் மயங்கிய நாங்கள் எழுந்ததேயில்லை. சினிமா பேட்டை இன் லார்டு என்றுமே நீங்கள் தான் தலைவா.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என கூறி பதிவிட்டுள்ளார்.
ஹர்பஜன் சிங்கின் இந்த ட்விட் ரஜினி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.