ஆறாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்த நடிகை

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (16:46 IST)
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில், முதன்முதலாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார் காயத்ரி. அதன்பிறகு வெளியான ‘ரம்மி’ படத்தில் இருவரும் நடித்தாலும், ஜோடியாக நடிக்கவில்லை. அதன்பிறகு ஜோடியாக நடித்த ‘புரியாத புதிர்’, வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது.


 

 
அத்துடன், ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ மற்றும் ‘சீதக்காதி’ படங்களிலும் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார் காயத்ரி. இந்த இரண்டு படங்களும் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில், தியாகராஜன் குமாரராஜா இயக்கும் ‘அநீதி கதைகள்’ படத்திலும் நடிக்கிறாராம் காயத்ரி. இந்தப் படத்தில் சமந்தா, ஃபஹத் ஃபாசில் ஆகியோரும் நடிக்கின்றனர்.
 
இப்படம் மூலம் காயத்ரி ஆறாவது முறையாக விஜய் சேதுபதியுடன் மோடி சேருகிறார்.
அடுத்த கட்டுரையில்