நடிகர் விஜய் புகை பிடித்தது தவறு - நடிகை கவுதமி ஆவேசம்

Webdunia
ஞாயிறு, 22 ஜூலை 2018 (16:32 IST)
நடிகர் விஜய்  புகைபிடிப்பது போல காட்சிகளில் நடித்திருப்பது கண்டிக்கத்தக்க விஷயம் என நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்.
சர்க்கார் பட போஸ்டரில் நடிகர் விஜய்  புகைபிடிப்பது போல காட்சிகள் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு பாமக அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். விஜய்க்கு சுகாதாரத்துறை நோட்டீஸும் அனுப்பியது. அதைத் தொடர்ந்து புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் நீக்கப்பட்டன.
 
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்களைக் கவுரவிக்கும் வகையில், ‘வாழ்க்கையைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை கௌதமி கலந்து கொண்டார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிகரெட் பிடிப்பவர்களால் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. புகை பிடிப்பவர்களைவிட அருகில் உள்ளவர்களுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்றார். சர்க்கார் படத்தில் நடிகர் விஜய் புகைபிடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், திரைத்துறையில் உச்சத்தை அடைந்த அவர் இப்படி செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆவேசமாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்