பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிக்சன் இந்த போட்டியாளரா?

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (15:49 IST)
ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் கசிந்து உள்ளது.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் விக்ரம், மணி சந்திரா, பிராவோ, பூர்ணிமா, விசித்ரா, அக்சயா, கானா பாலா மற்றும் ரவீனா ஆகிய ஏழு போட்டியாளர்கள் இருந்த நிலையில் அவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற கானா பாலா எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

இந்த வாரம் விக்ரம் சரவணன் வெளியேறுவார் என்றும் அவருக்கு தான் குறைந்த வாக்குகள் கிடைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் கிடைத்த நிலையில் தற்போது கானா பாலா வெளியேற்றப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் கானா பாலா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்து பெரிதாக பார்வையாளரை கவரும் வகையில் விளையாடவில்லை என்பதால் அவர் வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்