குடிசை பகுதியில் வசிப்பவர்களுக்கு இலவச உணவு…. முதல்வர் பழனிசாமி

Webdunia
சனி, 5 டிசம்பர் 2020 (16:17 IST)
சென்னையில் குடிசைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு நாளை காலை தொடங்கி வரும் 13 ஆம் தேதி வரை இலவச உணவு  வழங்கப்படும் என  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் புயலாலும் மழையாலும் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்., ஊருக்குள்ளும் வீட்டுக்குள்ளும் மழை நீர் புகுந்து விட்டதால் அவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில்,  சென்னையில்  உள்ள 5.3 லட்சம் குடும்பங்களுக்கு நாளை காலை முதல் வரும் 13 ஆம் தேதி இரவு வரை மூன்று வேளை இலவச உணவு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்