இடிந்து விழுந்த பாலம்: அதிர்ஷ்டவசமாக தப்பிய நடிகை

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2019 (13:42 IST)
தமிழில் ஞானகிறுக்கன், அரவான் போன்ற படங்களில் நடித்தவர் அர்ச்சனா கவி. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் பிரபலமான நகைச்சுவை நடிகரான அபிஷ் மாத்யூவும், அர்ச்சனாவும் பல நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சமீபத்தில் இவர் தந்து குடும்பத்தினருடன் கொச்சி விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது மெட்ரோ பாலத்தின் கீழே அவருடைய கார் சென்று கொண்டிருந்தபோது பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. அதிலிருந்து உடைந்த காரைகள் காரின் மேல் விழுந்தன. டிரைவர் சாதுரயமாக காரை ஓட்டி யாருக்கும் அடிப்படாமல் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார். இதனால் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அர்ச்சனா கேரளா மெட்ரோ நிறுவனத்தை கேள்விக்கேட்டு பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த மெட்ரோ நிறுவனம் தங்களது வருத்தங்களை தெரிவித்து கொண்டதுடன், பாதிக்கப்பட்ட டிரைவரிடம் பேசிவருகிறோம். இதுபோல் இனி அசம்பாவிதங்கள் நடக்காதபடி பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்