கமல்ஹாசன சுத்தமா பிடிக்காது.... ஆனால்.....? என்ன சொன்னார் ராதாரவி?

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (12:42 IST)
பொதுவாகவே தமக்கு கமல்ஹாசனை பிடிக்காது என்றும் இந்த விஷயத்தில் அவரை தமக்கு பிடிக்கும் எனவும் ராதாரவி பேசியுள்ளார்.
 
எப்பொழுதும் சர்ச்சையான கருத்தை கூறி வரும் ராதாரவி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நயன்தாராவை பற்றி அவதூறாக பேசி சிக்கலில் சிக்கினார். பின் தான் பேசியது தவறாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் என கூறினார்.
 
இந்நிலையில் பட விழா ஒன்றில் பங்கேற்ற ராதாரவி, பேசுகையில் கதாநாயன்கள் எப்பொழுதும் கருப்பு கண்ணாடி போட்டு நடிக்காதீர்கள். எப்பையாவது போடலாம் ஆனால் எப்பொழுதும் போட்டு நடிப்பவர்களுக்கு நடிப்பு சுத்தமாக தெரியாது என்று தான் அர்த்தம்.
 
கமல்ஹாசனை பாருங்கள்... அவரை எனக்கு பிடிக்காது தான். ஆனால் அவர் படத்தில் எங்கு கண்ணாடி போட வேண்டுமோ அங்கு மட்டும் தான் கண்ணாடி போடுவார். அதனால் தான் அவர் சினிமாவில் இன்று டாப்பாக உள்ளார் என பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்