பிரபல தொலைக்காட்சி நடிகர் படுக்கையில் பிணமாக மீட்பு

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (11:47 IST)
தில் மில் கயி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் பரஞ்பே பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
அவருக்கு வர்யது (26). அந்த நிகழ்ச்சியில் ஜிக்னேஷ் என்ற ஆண் நர்ஸாக நடித்துள்ளார். அதிலிருந்து ரசிகர்கள் அவரை ஜிக்னேஷ்  என்றே அழைத்து வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஜிக்னேஷின் தாய் பார்த்துள்ளார். மும்பையில் வசித்து வந்தா அவர் தனது வீட்டு படுக்கையறையில் பிணமாகக்  கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து கரணுக்கு தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சில ஊடகங்களில் செய்திகள்  வெளியாகியுள்ளது. கரணின் மரண செய்தி அறிந்து அவருடன் நடித்த கலைஞர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். இதற்கு முன் சாந்தி உள்ளிட்ட  பல பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நரேந்திர ஜா கடந்த 14ஆம் தேதி புனேவில் காலமானர். இதையடுத்து தற்போது கரண் இறந்துள்ளது  தொலைக்காட்சி பிரபலங்களை மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்