‘பாகுபலி’யால் கூட தொட முடியாத ரஜினியின் சாதனை

செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (11:01 IST)
ஜப்பானில், ‘பாகுபலி’யால் கூட ரஜினியின் சாதனையைத் தொட முடியவில்லை. 
ரஜினி நடிப்பில் வெளியான ‘முத்து’ படம், ‘டேன்சிங் மகாராஜா’ என்ற பெயரில் ஜப்பானில் ரிலீஸானது. அங்கு 180 நாட்கள் ஓடி, 1.6 மில்லியன் டாலர்களை  வசூலித்து, ஜப்பானில் அதிகம் வசூலித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.
 
ஆமீர் கான் நடிப்பில் வெளியான ‘3 இடியட்ஸ்’, 1.48 மில்லியன் டாலர்களை வசூலித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது. சமீபத்தில் வெளியான ‘பாகுபலி  2’, 100 நாட்கள் ஓடி 1.3 மில்லியன் டாலர்களை வசூலித்து மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
 
ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்ற ‘பாகுபலி’யால் கூட ரஜினியின் சாதனையைத் தொட முடியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்