ராகுல் காந்தி தான் இன்றைய பாட்ஷா, ரஜினி இல்லை: நக்மா

திங்கள், 16 ஏப்ரல் 2018 (15:52 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தின் நாயகியான நக்மா தற்போது அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவராக உள்ளார். இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இன்றைய பாட்ஷா ராகுல்காந்திதான் என்று கூறினார்
 
6 நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ள நடிகை நக்மா, இன்று திருக்கனுரை அடுத்த சோரப்பட்டு என்ற இடத்தில் பொதுமக்களிடையே உரையாற்றினார்.
 
அப்போது அவர் பாட்ஷா படத்தில் இடம்பெற்ற 'நீ நடந்தால் நடை அழகு, .நீ சிரித்தால் சிரிப்பழகு...நீ பேசும் தமிழ் அழகு... நீ ஒருவன் தானழகு... என்ற பாடலை பாடினார்.
 
இந்த பாடலை கேட்டவுடன் அங்குள்ள மக்கள் சூப்பர் ஸ்டார் என்றும், ரஜினி ரஜினி என்றும் குரல் எழுப்பினர். உடனே நக்மா, 'இந்த பாடலை நான் பாடியது ரஜினிக்காக அல்ல என்றும், இன்றைய நிலையில் நமது பாட்ஷா ராகுல்காந்தி தான் என்றும் கூறினார். இதனால் அங்கு நின்றிருந்த ரஜினி ரசிகர்கள் அதிருப்தி அடைந்து நக்மாவுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்