அந்த மனுவில் ஆட் பியுரோ நிறுவனத்திற்கு வழங்கவேண்டிய ரூ.10 கடன் தொகையில் ஏற்கனவே ரூ 9.2 கோடி வழங்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள ரூ 80 லட்சத்தை விரைவில் கொடுத்துவிடுவோம் என்றும் மீடியா ஒன் கூறியுள்ளது. மேலும் இந்த கடன் தொகைக்கும், லதா ரஜினிகாந்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் மீடியா ஒன் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தனது இடைக்கால மனுவில் கூறியிருந்தது.
ஆனால் மீடியா ஒன் நிறுவனத்தின் இந்த மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட் வரும் ஜூலை 3-ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் அல்லது, அவரை சார்ந்த நிறுவனம் கடன் தொகையை செலுத்த வேண்டும் என்ற தங்களது முந்தைய உத்தரவு தொடரும் என்று உத்தரவிட்டுள்ளது.