இளம் இயக்குனர்களுக்கு எடிட்டர் ரூபனின் ஷார்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அறிவிப்பு!

J.Durai
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (09:13 IST)
தனது எடிட்டிங் திறமைக்குப் பெயர் பெற்றவர் ரூபன். இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது ‘ரூபன் டிரெய்லர் ஹவுஸ்’ என்ற பெயரில் ஃபிலிம் ஃபெஸ்டிவலை அறிவித்திருக்கிறார்.
 
15-30 நிமிடங்கள் இருக்கும்படியான குறும்படங்களை இயக்கி அனுப்ப வேண்டும்.
 
கதைக்களம் எந்த ஜானரிலும் இருக்கலாம். ஒரு நபரே எத்தனை குறும்படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். 
 
இந்த குறும்படங்களுக்கு ஆங்கிலத்தில் சப்டைட்டில்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும். 
 
குறிப்பாக செப்டம்பர் 15, 2024-க்குள்  குறும்படங்களை அனுப்ப வேண்டும்
 
அனுப்ப வேண்டிய இணையதளம்:
 https://qr.me-qr.com/GgVUuF5q?

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்