டாக்டர் படத்தின் டிரைலர் ரிலீஸ்...இணையதளத்தில் வைரல்

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (17:53 IST)
டாக்டர் படத்தின் டிரைலர் ரிலீஸாகியுள்ளது.
 
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் படம் டாக்டர். இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இப்படம் தியேட்டரில் ரிலீஸாகுமா? ஓடிடியில் ரிலீஸாகுமா எனக் கேள்வி எழுந்த நிலையில் படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
 
அதில், வரும் அக்டோபர் 9 ஆம் தேதி இப்படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் அனிருத் இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் டாக்டர் படத்தின் டிரைலர்  தற்போது ரிலீஸாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்