ஓவியாவால் ஈர்க்கப்பட்ட பிரபல இயக்குனர்...

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (10:55 IST)
பிரபல இயக்குனரான சீனு ராமசாமி, ஓவியாவை தன்னுடைய இன்ஸ்ப்ரேஷன் என்று கூறியுள்ளார். 


 

 
இத்தனைப் படங்களில் நடித்தும் கிடைக்காத புகழ், ‘பிக் பாஸ்’ என்ற ஒற்றை நிகழ்ச்சியில் கிடைத்துவிட்டது ஓவியாவுக்கு. சமூக வலைதளங்களில் மட்டுமல்ல, எங்கு திரும்பினாலும் ஓவியா பற்றிய பேச்சுத்தான். கட்சி ஆரம்பிக்கும் அளவுக்கு அத்தனைப் பேர் ஓவியாவுக்கு ரசிகர்களாகி இருக்கின்றனர். அதில், பல பிரபலங்களும் அடக்கம். இயக்குனர் சீனு ராமசாமியும் அவர்களுள் ஒருவர்.
 
“தன்னுடைய அம்மாவோ, அப்பாவோ கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓவியா ஒருமுறை என்னிடம் சொன்னார். அவர் இப்போது நன்றாக இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஓவியாவின் மன உறுதிதான் எனக்கு இன்ஸ்ப்ரேஷன். பாரதி, தாகூர் போன்றவர்கள் மட்டும்தான் இன்ஸ்ப்ரேஷனாக இருக்க வேண்டுமா என்ன? ஒரு பெண்ணும் இன்ஸ்ப்ரேஷனாக இருக்கலாம்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.
அடுத்த கட்டுரையில்