"பொன்னியின் செல்வன்" படத்தின் அதிரடி அப்டேட் கொடுத்த மணிரத்னம்!

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (11:37 IST)
மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படம் பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகிவருகிறது. இப்படத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடிக்கும் ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். அதனாலே சினிமா பிரியர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கல்கி நாவலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விறு விறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. அதில்  ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரின் காட்சிகளைப் படமாக்கினார் மணிரத்னம். தாய்லந்தில் படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு அறிவித்ததால் படத்தில் வேலைகள் தொடரமுடியவைல்லை. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் மணிரத்தினம் கொடுத்துள்ளார். அதாவது, கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடரும் என்று இயக்குனர் மணிரத்னம் மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்