ஆசனவாயில் தந்தத்தை ஏற்றினேன் – யானையைக் கொன்றவனுக்கு தண்டனை கொடுக்கும் லிங்குசாமி!

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (16:03 IST)
கேரளாவில் கடந்த வாரம் யானை ஒன்று அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து கொடுக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் அந்த கொலையாளிக்கு எப்படி தண்டனை கொடுக்கவேண்டும் என இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார்.

கேரள மாநிலம், மலப்புரம் கிராமத்துக்கு அருகில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. இதனைப் பார்த்த சிலர் அண்ணாசிப் பழம் ஒன்றை அந்த யானைக்கு கொடுத்துள்ளனர். அந்த அண்ணாசிப் பழத்தை யானைக் கடிக்கையில் அதில் வைக்கப்பட்டு இருந்த வெடி ஒன்று வெடித்துள்ளது. இதனால் யானையின் நாக்கு மற்றும் வாய் கடுமையாக காயமடைந்துள்ளது.

இதையடுத்து வலியுடனேயே அந்த கிராமத்தைச் சுற்றி வந்த யானை, அந்த ஊரில் இருக்கும் வீட்டையோ மனிதர்களையோ தாக்கவில்லை. இதையடுத்து வெள்ளியாற்றில் இறங்கி நின்றுள்ளது அந்த யானை. வனத்துறை அதிகாரிகள், அந்த யானையை கும்கி யானைகளோடு மீட்க முயன்றுள்ளனர். ஆனால் ஆற்றை விட்டு வெளியே வராத அந்த யானை, மே 27 ஆம் தேதி இறந்துள்ளது. இதையடுத்து மருத்துவர் முன் நடந்த பிரேதப் பரிசோதனையில் அந்த யானையின் வயிற்றில் ஒரு சிசு இருந்தது தெரிந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரவி கண்டனங்களைப் பெற்றது.

இந்நிலையில் அந்த யானைக்கு வெடிவைத்துக் கொன்றவனை எப்படி தண்டிக்க வேண்டும் என்று இயக்குனர் லிங்குசாமி தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் ‘யானையை கொன்றவனை கண்டறிந்த பிறகு என்ன தண்டனை கொடுக்கலாம் என்ற பல யோசனைகளுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தேன்.. ஒரு தந்தம் கொண்டு நடு முதுகில் யானை பலம் கொண்டு இறக்கினேன்.. இன்னொரு தந்தம் கொண்டு கீழ்வழியாக மேல்நோக்கி ஏற்றினேன்.. அப்போதும் தீர்ந்தபாடிலை கோபம்.. ஏனெனில் அவன் கர்ப்பம் தரித்திருக்கவில்லை ’ எனத் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்