இளம் நடிகருடன் கைகோர்த்த இயக்குநர் சேரன்....

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2021 (23:56 IST)
யோகிபாபு நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் தர்மபிரபு. இப்படத்தைதயாரித்த ஸ்ரீ வாரி பிலிம்ஸ் அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது.

நடிகர் கார்த்திக்-ன் மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக் படத்தில் பிரபல நடிகர் ராஜசேகரின் மகள் சுவாத்மிகா அறிமுகமாகவுள்ளார். இவர்களுடன் இணைந்து இயக்குநர் சேரன்,டேனியல் பாலாஜி, சரவணன், விக்னேஷ், சிங்கம்புலி, கவிஞர் சினேகன், விஜய்டிவி  ஜாக்குலின் போன்ற நட்சத்திரப் பட்டாளமே நடிக்கவுள்ளார்.

கௌதம் கார்த்திக் –சுவாத்மிகா நடிக்கவுள்ள புதிய படத்தை நந்தா பெரியசாமி என்பவர் இயக்கவுள்ளார். மேலும் கார்த்திக் ஏற்கனவே நடித்து ஹிட் அடித்த வருஷம் 16 என்ற படத்தில் சாயலில் இது உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு சிவப்பு மஞ்சல் பச்சை ,டிரிப் படத்திற்கு இசை அமைத்த சித்துகுமர் இப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்