மாமனாரின் பேச்சை மீறும் மருமகன்!!

Webdunia
புதன், 3 மே 2017 (13:40 IST)
நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியராக இருந்த தனுஷ் ப.பாண்டி படத்தின் மூலம் தான் ஒரு நல்ல இயக்குனர் என்றும் பதிவு செய்து கொண்டார்.  


 
 
ப.பாண்டி படத்தை பார்த்த மாமனார் ரஜினிகாந்த் தனுஷிடம், ஒரு படம் இயக்கினாலும் அது சரித்திரத்தில் இடம் பெற வேண்டும். அவ்வாரே இருந்தது ப.பாண்டி. இதனால் அடுத்தடுத்து படம் இயக்கி அந்த படத்தின் மதிப்பை இழக்க வேண்டாம் என கூறினார்.
 
ப.பாண்டியின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் உள்ளது ஆனால் எப்பொழுது என்று தெரியாது என கூறிய தனுஷ். தற்போது மாமனாரின் பேச்சை மீறி இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை எழுத துவங்கிவிட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
ப.பாண்டி இரண்டாம் பாகத்தில் தனது மாமனார் ரஜினிகாந்தையே ஹீரோவாக நடிக்க வைக்கும் திட்டமும் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்