ரஜினி ஜீப்பை கேட்ட மகேந்திரா நிறுவனத்துக்கு தனுஷ் அளித்த பதில்

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (21:42 IST)
காலா படத்தில் ரஜினி பயன்படுத்தும் ஜீப்பை மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்க்யூட்டிவ் சேர்மன் ஆனந்த் மகேந்திரா அந்த கார் வேண்டும் என கேட்டார். அதற்கு தனுஷ் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.


 
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் காலா. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பிரபலம் அடைந்தது. அந்த போஸ்டரில் ரஜினி மகேந்திரா நிறுவனத்தின் தார் என்ற ஜீப்பில் அமர்ந்திருப்பார். இதைப்பார்த்த மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்க்யூட்டிவ் சேர்மன் ஆனந்த் மகேந்திரா ரஜினி அமர்ந்த அந்த ஜீப்பை எங்கள் அருங்காட்சியகத்தில் வைக்க விரும்புகிறோம். எனவே, எங்களுக்கு அந்த ஜீப் வேண்டும் என கேட்டு இருந்தார்.
 
இதற்கு காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தற்போது ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். தனுஷ் கூறியதாவது:-
 
மிக்க நன்றி, அந்த வாகனத்தை தற்போது சூப்பர் ஸ்டார் படப்பிடிப்பில் பயன்படுத்தி வருகிறார். படப்பிடிப்பு முடிந்ததும் உங்களிடம் கொண்டுவந்து உறுதியாக சேர்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆனந்த் மகேந்திராவும் தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  
அடுத்த கட்டுரையில்