தனுஷின் ‘ராயன்’ படத்தின் செகண்ட் சிங்கிள்.. ஏஆர் ரஹ்மானிடம் இருந்து ஒரு கானா பாடலா?

Mahendran
புதன், 22 மே 2024 (18:11 IST)
தனுஷ் நடித்து வரும் ‘ராயன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்னால் வெளியானது என்பதும் போருக்கு போகணும் போகணும் பொருள் எடுத்து வாயா என்ற அந்த பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது தெரிந்தது 
 
இந்த நிலையில் சற்றுமுன் தனுஷ் தனது சமூக வலைதளத்தில் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏஆர் ரஹ்மான் கம்போஸ் செய்த கானா பாடல் என்றும், இந்த பாடல் மே 24ஆம் தேதி வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் இந்த அறிவிப்புடன் அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில் சந்திப் கிஷான் மற்றும் அபர்ணா பாலமுரளி இருப்பதை எடுத்து இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர் என்பது உறுதியாகி உள்ளது.
 
 தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்